"உங்கள் பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்": முற்றுகையிட்ட மக்களிடம் நடிகர் விவேக் பதில்

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.

அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.



இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...